Posts

Showing posts from 2010

சிந்தனை சிற்பி ஓர் அறிமுகம்

Image
சிந்தனை சிற்பி கே .பாலசுப்பிரமணியன் B.E, M.B.A, M.Phil(Mgt), D.C.P.I.C., P.G.D.F.M., சிந்தனை சிற்பி ஒரு அறிமுகம்: சிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் திருச்சியை சேர்ந்தவர். * சிந்தனை சிற்பி பி.இ (மெக்கானிக்கல்), எம்.பி.ஏ (மார்க்கெட்டிங்), எம்.ஃபில்(மேலாண்மை) படித்தவர், 1. மேலாண்மை ஆலோசகர்(Management Consultant): சிந்தனை சிற்பி கே. பாலசுப்ரமணியன் கிரியேடிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி என்ற நிறுவனத்தை 1993 ஆம் ஆண்டு தொடங்கி, தற்சமயம் 75க்கும் மேற்ப்பட்ட நிறுவனங்களுக்கு மேலாண்மை ஆலோசகராக உள்ளார். 2. மேலாண்மை பேராசிரியர்(Management Professor): தமிழகத்தில் 15 க்கும் மேற்பட்ட பல்கலை கழகங்கள், 20 க்கும் மேற்பட்ட கல்லூரிகளூக்கு எம்.பி.ஏ பேராசிரியராக, 40க்கும் மேற்பட்ட மேலாண்மை பாடங்களை போதிக்கிறார். கடந்த 15 ஆண்டுகளில் 10,000 க்கும் மேற்பட்ட எம்.பி.ஏ மாணவர்களை உருவாக்கியவர். UGC - ன் ஆசிரியர் திறன் ஊக்க பயிற்சி முகாமில், இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட மேலாண்மை ஆசிரியர்களை உருவாக்கியவர். 3. மனித வள மேம்பாடு பயிற்சியாளர் (Corporate Trainer) மனித வள மேம்பாடு பயிற்சியாளர்,

உடல் ஆரோக்கியத்திற்க்கு 10 கட்டளைகள்:

1. உடல் எடை: நீங்கள் சாப்பிடும் உணவில் கிடைக்கும் கலோரி அளவுக்கும், உங்கள் உடல் உழைப்புக்கும் இடையே உள்ள அளவீட்டின்படி தான், உங்கள் உடல் எடை அமையும். எந்த வயதிலும் உங்கள் உடல் நிறை குறியீட்டெண் (பாடி மாஸ் இண்டெக்ஸ்) 23 ஆக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் எடையை (கிலோ அளவு), உங்கள் உயரத்தின் (மீட்டர் அளவு) இருமடங்குப் பெருக்க அளவால் வகுத்தால் வரும் எண்தான் இது. உதாரணமாக 80 கிலோ / 2 மீட்டர் X 2 மீட்டர் என்ற கணக்கீட்டின் விடை 23 ஆக இருக்க வேண்டும். இந்த அளவு குறைந்தால், ஊட்டச்சத்து நிறைந்த உணவு உட்கொள்ள வேண்டும். அதிகரித்தால் உணவு கட்டுப்பாட்டை பின் பற்ற வேண்டும். உடல் நிலை குறீயீட்டெண் 30 என இருந்தால், அதிக உடல் எடையுடன் இருப்பதாகப் பொருள். அதிக உடல் எடை, மூட்டு வலி, நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், புற்று நோய் அகியவற்றுக்கு காரணமாக அமையும். அதே சமயம் உடல் எடையை பாராமரிப்பதாக எண்ணி, பி.எம்.ஐ., அளவு 20 தொட்டு, 'மாடல் அழகி' யாக விரும்புவது உண்மையில் ஆரோக்கிய குறைபாட்டை ஏற்படுத்தும். இதனால் மாதவிடாய் சீரற்று போதல், கர்ப்பம் தரித்தலில் சிக்கல், எலும்புகள் பலவீனம் அடைதல் ஆகியவை ஏ

உணவை ரசித்து....ருசித்து சாப்பிடவேண்டும்:

1.0 இரு வகை மனிதர்கள்: இந்த உலகில் இருவகை மனிதர்கள் உள்ளனர். முதல் வகை மனிதர்கள் உயிர் வாழ்வதற்க்காக சாப்பிடுகிறார்கள் இவர்கள் "EAT TO LIVE" என்ற ரகத்தை சேர்ந்தவர்கள். இரண்டாவது வகை மனிதர்கள் சாப்பிடுவதற்க்காகவே உயிர் வாழ்பவர்கள். இவர்கள் "LIVE TO EAT " என்ற ரகத்தைச் சார்ந்தவர்கள். நம்மில் பலர் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் சாப்பிடுகிறோம். விளைவு நாக்கு சுவைக்கு உண்ணுகிறோம். வயிறு சுவைக்கு இவர்கள் உண்பது இல்லை. 2.0 உங்களுக்கு சாப்பிடத் தெரியுமா? தினமும் நான் சாப்பிடுகிறேன். பிறந்தது முதல் சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். சாப்பிடாமல் நாம் உயிர் வாழ முடியாது என்று நீங்கள் சொல்லுவது எனக்கு புரிகிறது. என் கேள்வி யாதெனில் சாப்பிடும் போது செய்ய வேண்டிய விசயங்களை நாம் மறந்துவிடுகிறோம். உங்களுக்கு எப்படி முறையாக சாப்பிட வேண்டும் என்று தெரியுமா? சார் நான் ஆண்டாண்டு காலமாக உணவு சாப்பிடுகிறேன். என்னைப் பார்த்து இந்த அர்ப்பத்தனமான கேள்வியைக் கேட்டுவிட்டீர்களே ? என்று தானே நீங்கள் நினைக்கிறீர்கள். உண்மையில் நம்மில் 100 பேரில் ஒருவருக்கு கூட எப்படி முறையாக சாப்பிடுவது